Skip to main content

‘நமக்குள் ஒன்றிணைவோம், நமக்காய் ஒன்றிணைவோம்’ - பெண் காவலர்கள் ரூ.11 லட்சம் நிதியுதவி

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
women constables have given rs 11 lakh to family of deceased constable

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து, கடந்த 21 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

கடந்த 17.04.2024 அன்று பணி முடித்து விட்டு, தனது கணவருடன், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பெண் தலைமை காவலர் பரிமளாவுடன் 2003 ஆண்டில் ஒன்றாக காவலர் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள் ஒன்றிணைந்து, நமக்குள் ஒன்றிணைவோம், நமக்காய் ஒன்றிணைவோம் என்ற நோக்கத்தில், பரிமளாவின் பெண் பிள்ளை மற்றும் ஆண் பிள்ளையின் பெயரில் 10 லட்சம்,  ரூபாய் மதிப்பிலான அஞ்சலக வைப்புத் தொகை பத்திரங்கள் மற்றும் அசல் ரசீதுகளையும், 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும்  பெண் தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினரிடம்  அவருடன் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள் ஒன்றிணைந்து வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து பெண் காவலர் பரிமளாவின் திருவுருபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அவருடன் பணியாற்றிய நிகழ்வுகளை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பசுமாட்டின் வாயில் வெடித்த நாட்டு வெடிகுண்டு - இருவர் கைது 

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Two people were arrested for storing

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராளகொத்தூர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மஞ்சுளா தம்பதியினரின் பசுமாடு ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது. அப்போது, அங்கே நிலத்தில் ஏதோ காய் எனக் கடித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாட்டின் வாய் மற்றும் தாடை பகுதி கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது.

இது குறித்து  உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்  குப்புராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (24) மற்றும் அங்கியாபள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வனவிலங்குகளை வேட்டையாட விவசாய நிலங்களில் ஆங்காங்கே நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதும். அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுமாட்டின் வாய் மற்றும் தாடை கிழிந்ததும் தெரியவந்தது. 

இவர்கள் விவசாய நிலத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story

பெண் போலீசார் மீது தாக்குதல்; கணவன் கைது

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Attack on policewomen; Husband arrested

நேற்று காஞ்சிபுரத்தில் பெண் காவலரை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம். அங்கு பணியாற்றி வரும் பெண் காவலரான டெல்லி ராணி வழக்கமாக நேற்று பணியை முடித்துவிட்டு உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள இந்தியன் வங்கி அருகே அவருடைய கணவர் மேகநாதன் வழிமறித்து டில்லி ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டில்லி ராணியை சரமாரியாக தாக்கினார்.

ரத்த வெள்ளத்தில் அலறியடித்த டெல்லி ராணி இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டு தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் பெண் காவலர் டெல்லி ராணியை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீருடையில் இருந்த பெண் காவலர் கணவராலே கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பெண் போலீசார் மீது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற மேகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.