காதலனுடன் எஸ்கேப்பான மனைவி, தனது பாஸ்போர்ட் விசாரணைக்காக மீண்டும் சொந்த ஊருக்கு வர, காத்திருந்த கணவனோ கையில் தயாராக கொண்டு வந்திருந்த இரும்புக் கம்பியால் மனைவியை அடித்தேக் கொன்றுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையை சேர்ந்தவர் மோசஸ். பேருந்து வாகன ஓட்டுநரான இவருக்கும் அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த லதாவுக்கும் கடந்த 201ம் ஆண்டு திருமணமானது. இரு குழந்தைகளுடன் முதலில் சொந்த ஊரில் இருந்து தொழில் செய்து வந்த மோசஸிற்கு கடன் நெருக்கடி அதிகமாகவே, அபிராமத்தில் குடி பெயர்ந்து பசும்பொன்னில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளிக்குழந்தைகளின் வாகன ஓட்டுநராக பணியாற்றியதுடன் மட்டுமில்லாமல், தன்னுடைய மனைவி லதாவிற்கும் அதே பள்ளியில் அலுவலக பணியாளராக பணி அமர்த்தியிருக்கின்றார் இவர். இவ்வேளையில், வேலூர் மாவட்டத்தினை சேர்ந்த ஒருவருடன் லதாவிற்கு நெருக்கம் ஏற்பட அது காதலாக மாறி 2018, மே மாதம், தனது கணவரைவிட்டு காதலனுடன், லதா மாயாமானார். மோசஸூம் தனது மனைவி லதாவை காணவில்லை என 2018, மே 6 ல், அபிராமம் போலீசில் புகார் கொடுத்து காத்திருந்தார்.
இவ்வேளையில், தனது காதலனுடன் வெளிநாட்டிற்கு செல்வதற்காக, முன்பு தன்னுடைய கணவருடன் வசித்த அபிராமம் முகவரியை கொடுத்து பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்திருந்தார் கள்ளக்காதலனுடன் மாயமான லதா. விசாரணைக்காக அபிராமம் காவல்நிலையமும், " நீங்கள் காணாமல் போனதாக உங்கள் கணவர் புகார் கொடுத்துள்ளார். உங்கள் கணவருடன் வந்து அதனை நிவர்த்தி புகாரை நிவர்த்தி செய்துவிட்டு செல்லுங்களேன்." என அழைப்பு விடுக்க, எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தனது கணவர் மோசஸைத் தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் விவகாரத்தையே கூறாமல், " நான் செய்தது தவறுதான். இனிமேல் ஒழுங்காக வாழ்கிறேன்." என போனிலேயே அழுது புலம்பி விட்டு கணவரைத் தேடி அபிராமம் அருகே அகத்தாரிருப்பு விலக்கு ரோட்டிற்கு சென்றுள்ளார். இது தான் தருனமென அங்கு இரும்புக்கம்பியுடன் காத்திருந்த மோசஸ் லதாவை தாக்கிக் கொன்றிருக்கின்றார். இது குறித்து அபிராமம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மோசஸை கைது செய்துள்ளது. கணவனே மனைவியைக் கொன்றதால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.