Skip to main content

இளையராஜா என்ன குற்றம் செய்தார்? - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி!

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

What crime did Ilayaraja commit? - Union Home Minister L. Murugan Question!

 

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அது தற்போது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள முன்னுரையில், "பிரதமர் நரேந்திர மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

What crime did Ilayaraja commit? - Union Home Minister L. Murugan Question!

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைதளங்களில் இளையராஜாவின் பேச்சுக்குப் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இளையராஜா என்ன குற்றம் செய்தார்? அறிவாலய சுற்றத்துக்குப் பிடிக்காத கருத்து, குற்றமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இளையராஜா கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்தார். அறிவாலயத்தின் விருப்பப்படி கருத்து தெரிவிக்காததுதான் இளையராஜா செய்த குற்றமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்