சேலம் - சென்னை இடையே அமையவிருக்கும் 8 வழிச்சாலையை பயன்படுத்தி பாருங்கள். மக்களுக்கு அது பிடிக்கவில்லையெனில் நாங்களே அதற்கு பூட்டுப் போட்டுவிடுகிறோம் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், கப்பலூரில் தொழிலதிபர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், “இன்று தமிழகத்தில் கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கின்றனர். சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டுகின்றனர். இந்தியாவில் 8 வழிச்சாலை மும்பை - புனே இடையே ஒரே இடத்தில்தான் அமைந்துள்ளது.
அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில்தான் ரூ.10 ஆயிரம் கோடியில் இத்திட்டம் அமையவுள்ளது. முதலில் 8 வழிச்சாலையை பயன்படுத்தி பாருங்கள். அதன்பின் அது பிடிக்கவில்லையெனில் நாங்கள் அதற்கு பூட்டுப்போட்டு விடுகிறோம். மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.
ரூ10,000 கோடியில் அமையுள்ள சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் பற்றி அமைச்சர் உதயகுமார் இப்படி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.