Skip to main content

அரசு பள்ளிக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமித்த கிராம மக்கள்!!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

 

p

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குவலையப்பட்டியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடியிருந்தது. ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மாணவர்களும் பள்ளி இல்லாதால் படிப்பை மறந்து விளையாட ஆரம்பித்தனர். இந்த நிலையில் தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டது. 

 

அந்த வகையில் இந்த பள்ளிக்கு ஏற்கனவே 2 பயிற்சி ஆசிரியர்களை அதிகாரிகள் நியமித்தனர். பள்ளியில் 90 க்கும் மேற்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு 2 ஆசிரியர்கள் போதாது என்ற நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்,பொதுமக்களும் இணைந்து அப்பகுதியில் படித்த 2 பட்டதாரிகளை நியமித்தனர். இதனையடுத்து 4 ஆசிரியர்களுடன் பள்ளி நேற்று முதல் செயல்பட ஆரம்பித்தது. 2வது நாளாக இன்றும் பள்ளி இயங்கியது. இது கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்