Skip to main content

“சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது எதார்த்தமான ஒன்று” - வேளாக்குறிச்சி ஆதீனம்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

 Velakurichi Adheenam said, true that the new Parliament building was opened on Savarkar's birthday.

 

"செங்கோல் நிறுவப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் சமத்துவமும் நீதியும் நேர்மையும் பிரதிபலிக்க வேண்டும். சாவர்க்கர் பிறந்தநாளில் கட்டடம் திறக்கப்பட்டது எதார்த்தம் என்றே நினைக்கிறேன்” என நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று ஊர் திரும்பிய வேளாக்குறிச்சி ஆதீனம் தெரிவித்துள்ளார்.  

 

திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் என்றழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்றார். இன்று நாகை மாவட்டம் திருப்புகலூர் மடத்திற்கு வந்தவருக்கு மங்கல வாத்தியங்கள் அதிர்வேட்டுகள் முழங்க அவரது பாதங்களுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், உள்ளூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “தமிழ் சைவ ஆதீனங்கள் மூலம் வழங்கப்பட்ட செங்கோல் மீண்டும் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. நீதி, நேர்மை, சமத்துவத்தின் குறியீடாக செங்கோல் பார்க்கப்படுகிறது. நல்லாட்சி புரிவதற்கு முன்பாக அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டது. புதிதாக செங்கோல் வழங்கப்படவில்லை. பண்டித ஜவஹர்லால் நேரு காலத்தில், திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்டு அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் புதுப்பிக்கப்பட்டு தற்போது மக்களவையில் நிறுவப்பட்டு இருக்கிறது என்றால், ஆட்சியாளர்கள் நேர்மையாகச் செயல்பட வேண்டும். 

 

மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். எந்தவித பேதமும் இன்றி சமத்துவமும் நீதியும் நேர்மையும் மக்களவையில் பிரதிபலிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அந்த செங்கோல் நிறுவப்பட்டதாக கருதுகிறேன். செங்கோல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குறை காணுவதை விட அதன் பின்னால் உள்ள தத்துவத்தை உணர வேண்டும். சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது எதார்த்தமான ஒன்றாக இருக்கலாம். திட்டமிட்டு பிரதமர் செய்திருப்பார் என்று முடிவெடுக்க முடியாது." என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு; பா.ஜ.க. எம்.பி.களுக்கு முக்கிய உத்தரவு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Parliament session ends today Important order for BJP MPs

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவை அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று மக்களவை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று முன்தினம் (08.02.2024) தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் (10.02.2024) நிறைவடைகிறது. வழக்கமாக சனிக்கிழமைகளில் நாடாளுமன்ற அலுவல்கள் நடக்காத நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடவுள்ளதால் மக்கள் மத்தில் எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று அவைக்கு வர தலைமை கொறடா உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில் ‘நாடாளுமன்றத்தில் முக்கிய அலுவல் இருப்பதால் கட்டாயம் அவைக்கு வர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Budget Session; Lok Sabha extension for one more day!

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்டது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசினார்.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவை அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சனிக்கிழமையான 10 ஆம் தேதி வரை மக்களவை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்ஜெட் உரையின் போது கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.