Published on 30/08/2019 | Edited on 30/08/2019
2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வைகோ மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுவிக்கப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர் மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அன்றய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். முதல்வராக இருப்பவர் மீது கலங்கம் சுமத்த நினைப்பதாக பத்திரிகை செய்தி அடிப்படையில் அவர் மீது திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.
நீண்ட நாட்களாக நடந்துவந்த இந்த வழக்கை தற்போது எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி இந்த வழக்கில் இருந்து வைகோவை முழுமையாக விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.