Skip to main content

உறைவிட பள்ளிக்கு தடையற்ற மின்சாரத்திற்கு யூபிஎஸ்... சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Published on 24/11/2019 | Edited on 24/11/2019

வால்பாறை உண்டு உறைவிடப் பள்ளியில் தடையில்லா மின்சாரம் கிடைக்க யுபிஎஸ் சாதனம் வழங்கி மாணவர்களுடன் பிறந்தநாள் விழா கொண்டாடிய சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

 

UPS for uninterrupted electricity for boarding school... Congratulations to the community enthusiast!


கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பின்புறம் செயல்பட்டுவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் வால்பாறைப்பகுதியில் இயற்கையினால் ஏற்படும் பல்வேறு சூழ்நிலையினால் அடிக்கடி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் சமயங்களில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவந்தனர்.

இதை அறிந்த சமூக ஆர்வலர் சரவணபாபு தனது மகள் ஐஸ்வர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப்பள்ளிக்குச் சென்ற அவர் பள்ளி மாணவர்களுடன் தனது குடும்பத்தினருடன் மகளின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிக் மாணவர்களுக்கு டன் சிறப்பாகக் கொண்டாடினார். அதோடு அப்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தடையில்லாத மின்சாரம் கிடைக்கும் வகையில் ரூ 50,000 மதிப்புள்ள யூபிஎஸ் சாதனத்தை தனது மகளின் பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

இதனால் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளநிலையில் பொதுமக்களும் இவரை மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்