Skip to main content

மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

ramadoss


பொதுமக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு விதிகள் ஓரளவு தளர்த்தப்பட்டாலும், அது தமிழகத்திலுள்ள 90% மக்கள் வருவாய் ஈட்ட எந்த வகையிலும் பயனளிக்காது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் கூட, மக்களின் அச்சம் காரணமாகப் பல பகுதிகளில் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. 
 

கடந்த ஒன்றரை மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசு குறைந்தபட்ச வாழ்வாதார உதவிகளை வழங்காவிட்டால், அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே, ஏழை மக்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கான வாழ்வாதார உதவியாக ரூ.2,000 ரொக்கமும், வழக்கமாக வழங்கப்படுவது போன்ற உணவு தானியங்களும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்