Published on 30/03/2025 | Edited on 30/03/2025

பவானியில் ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்து போது இரண்டு பேர் மயங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகர் அடுத்துள்ள கோண வாய்க்கால் பகுதியில் போரிக் ஆசிட் டேங்கர் லாரி ஒன்று தூய்மைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருந்தது. மூன்று ஊழியர்கள் டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற நிலையில் மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்தது தெரியவந்தது. மூன்றாவது நபர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது