
ஒரே நாளில் சகோதரியையும் சகோதரனையும் இழந்த போஸ் வெங்கட்டிற்கு திரைத்துறையினர் ஆறுதல் கூறி வருகின்றனர்
தீரன் போன்ற சிறந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். இவர் சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவராகவும் உள்ளார். சென்னையில் எம்.எம்.கே. பகுதியில் வசித்து வரும் இவரது சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்னை வந்த போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
சகோதரியை கண்டு அழுத அவருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சகோதரியின் உடல் மீது விழுந்தே அவரும் மரணம் அடைந்தார் என கூறப்படுகிறது. ரங்கநாதனின் இறுதி ஊர்வலம் அறந்தாங்கியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் சகோதரரையும் சகோதரியையும் இழந்த நடிகர் போஸ் வெங்கட்டிற்கு திரை உலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.