Published on 24/01/2019 | Edited on 24/01/2019
டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதால் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் குக்கர்சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திந்தார். அந்த வழக்கில் பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும் அதேபோல் அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சியும் அல்ல என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் உள்ள பொதுவான சின்னத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே ஒதுக்க முடியும் என்றும், அதனை தனிப்பட்ட கட்சி உரிமைகோர முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.