Published on 16/09/2020 | Edited on 16/09/2020
சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14- ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (16/09/2020), தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடப்பு நிதியாண்டிற்கான கூடுதல் செலவிற்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கான சட்ட மசோதா இன்று தாக்கலாகிறது.
போயஸ்கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கான சட்ட மசோதாவையும், ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவையும் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்கிறார்.
ஏற்கனவே அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.