Skip to main content

கரோனா தடுப்பூசித் திருவிழா! - ஒரே நாளில் பல்லாயிரக் கணக்காணோர் போட்டுக் கொண்டனர்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

thousands of people taken   Corona Vaccine


இந்தியாவில், கரோனாவின் இரண்டாவது அலை விச ஆரம்பித்துள்ள நிலையில், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 'கரோனா தடுப்பூசி போடும் திருவிழா' என்று கடந்த 13ம் தேதி முதல் வருகின்ற 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் தொடர் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். 

 

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 86 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 42 தனியார் மருத்துவமனைகள் மூலம் இந்த கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் திருச்சியில் 6,576 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.


இதில், அரசு மருத்துவமனைகளில் 5,558 பேரும், தனியார் மருத்துவமனையில் 988 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்