Skip to main content

அதிமுகவில் இருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கம்! 

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

Thoppu Venkatachalam removed from AIADMK!

 

தனக்கு சீட் வழங்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் முடிவு செய்து, நேற்று (18.03.2021) மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பெருந்துறை தொகுதி வேட்பாளராக ஜெயக்குமார் என்பவரை அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், தனக்கு சீட் வழங்காததால் சுயேச்சையாக போட்டியிட அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் முடிவு செய்திருக்கிறார். நேற்று (18.03.2021) அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் மனுதாக்கல் செய்தார்.

 

'நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்' என தற்போதைய அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் மீது தோப்பு வெங்கடாசலம் குற்றசாட்டும் வைத்திருந்தார். இந்நிலையில், தோப்பு வெங்கடாச்சலத்தை அதிமுகவின் கட்சி அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த 2011, 2016 ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோப்பு வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்