Skip to main content

உள்ளுர் மக்களை மகிழ்ச்சியடைய வைத்த தீபத்திருவிழா

Published on 23/11/2018 | Edited on 24/11/2018
d


கார்த்திகை தீபத்திருவிழா என்றால் பாதுகாப்புக்கு வரும் போலிஸாருக்கும் திருவண்ணாமலை நகர பொதுமக்களுக்கும் இடையே பெரும் சண்டையே நடக்கும். ஒவ்வொரு சாலையையும் இரும்பு தடுப்பு போட்டு தடுத்துவிடுவார்கள். ஆட்டோக்கள் மற்றும் வெளியூர் கார்கள் நகருக்குள் வந்து மாடவீதியை ஆக்ரமிப்பதை தடுக்கவும், ஆட்டோக்களின் அட்டகாசத்தை தடுக்க மாடவீதியை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிடும்.


இதனால் அந்த தெருவில் குடியிருப்பவர்கள் கார்கள் மூலமாகவோ, இருசக்கர வாகனம் மூலமாக எங்கும் செல்ல முடியாது. எங்கு சென்றாலும் நடந்து தான் செல்ல வேண்டிவரும். அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக மகாதீபத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நகரை போலிஸ் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். தெருக்களை அடைத்துவிடும், வெளியூரில் இருந்து வரும் உள்ளுர்வாசிகளின் காரையும் நகருக்கு வெளியேவே நிறுத்திவிடும். இதனால் பெரும் சச்சரவு எழுந்தது.


இந்த ஆண்டு அப்படியெந்த பிரச்சனையும் இல்லை. மகாதீபத்தன்று விடியற்காலை தான் நகரை போலிஸ் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. குடியிருப்பு சாலைகளுக்கு தடுப்பு போட்டது. உள்ளுர் வாகனங்கள் என்றால் முக்கியத்துவம் தந்து நகருக்குள் செல்ல அனுமதித்தது. இருசக்கர வாகனங்களை கூட்டம் இல்லாத நேரத்தில் மாடவீதியில் செல்ல அனுமதி தந்தார்கள். போக்குவரத்து பிரச்சனையில்லாதது உள்ளுர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

 

சார்ந்த செய்திகள்