திருவண்ணாமலை மாவட்டம், போளுரை சேர்ந்த ரமேஷுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 12 ஆண்டு சிறை தண்டனையை 2017 முதல் அனுபவித்து வருகிறார்.

மத்திய சிறையில் உள்ள கைதிகளை சிறை வளாகத்தில் உள்ள விவசாய நிலம், சிறையை ஒட்டினார் போல் வெளியே உள்ள விவசாய நிலம், சிறைக்கு வெளியே உள்ள சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குடியிருப்புகளில் உள்ள புதர்களை சுத்தம் செய்வது, அந்த வீடுகளில் உள்ள சின்ன சின்ன வேலைகளை சிறை அதிகாரிகள் வாங்கி வந்தனர். இதற்காக சிறை வளாகத்தை விட்டு குடியிருப்பு வளாகத்துக்கு அழைத்து செல்வர்.
அதுபோல் ஜீலை 3ந்தேதி, சிறைக்கு வெளியே உள்ள விவசாய தோட்டத்தில் வேலை செய்ய கைதிகள் 20 பேரை அழைத்து சென்றுள்ளனர். அதன்படி வேலை செய்துவிட்டு வரும்போது, கைதி ரமேஷ் காணாமல் போய்விட்டார். அவர் தப்பி போய்விட்டார் என்பதை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டனர் அதிகாரிகள். தப்பி சென்ற கைதி தொடர்பாக பாகாயம் காவல்நிலையத்தில் சிறைத்துறை கண்காணிப்பாளர் சார்பில் புகார் தந்துள்ளனர். அதனை பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள், தப்பி சென்ற ரமேஷை தேடத்துத்வங்கியுள்ளனர்.