தமிழகத்தை அதிரவைத்த திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த 2ஆம் தேதி அதிகாலை நடந்த 13 கோடி கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கனகவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவாரூரில் டூவீலரில் சென்றபோது மணிகண்டன் மட்டும் சிக்கியதாக அவனிடமிருந்து திருட்டு நகைகள் 4.5 கிலோ தங்கம் கைப்பற்ற தரவும் திருவாரூர் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதற்காக சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் காவல்துறைக்கு திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜுலு பாராட்டுப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிலையில் நேற்று மாலை தன் மனைவியோடு தப்பிய கொள்ளைக்காரன் சுரேஷ் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த தகவலை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மறுத்தனர் .
இதற்கு இடையில் இன்று காலை மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாயார் கனகவள்ளி ஆகியோரை மட்டும் போலீசார் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணை கனகவள்ளியிடம் 450 திருட்டு நகை உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தப்பியோடி சுரேஷ் எங்கே என்று திருச்சி டிசி மயில்வாகனன் தரப்பில் ஒரு பக்கம் தேடிக்கொண்டிருந்தாலும் உண்மையில் போலீஸ் தரப்பில் கூறுவதில் சுரேஷ் கைது இல்லை என்கிற தகவல் உண்மை இல்லை என்றும் சுரேஷ் கொள்ளையனை நேற்று திருவாரூர் சென்ற டிசி மயில்வாகனன் குரூப் கைது செய்தாகவும் அவனை திருவாரூர் விடுதியில் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கவும், முக்கிய குற்றவாளி முருகன் குறித்த தகவலுக்காக சுரேஷை போலீசார் வைத்திருப்பதாகவும், கொள்ளையன் முருகன் இருக்கும் இடம் தெரியாமல் சுரேஷ் கைது செய்யப்பட்ட தகவல் வெளியே தெரியாது என்கிறார்கள் விசாரணையில் உள்ள முக்கிய அதிகாரிகள்.