Published on 06/02/2021 | Edited on 06/02/2021

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க முதற்கட்டமாக பள்ளிக் கல்வித்துறை மூலம் 18.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல் தொடக்கப்பள்ளிகளுக்கு தலா 5,000 ரூபாயும், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 10.000 ரூபாயும் நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் விளையாட்டு உட்கட்டமைப்புக்கு ஏற்றவாறு தரமான விளையாட்டு உபகரணங்களை வாங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.