Skip to main content

காவல்துறை மூலம் 1,182 மனுக்கள் தீர்வு!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

TAMILNADU POLICE DGP PRESS RELEASE

 

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் நேற்று (15/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,594 மனுக்கள் காவல்துறையில் பெறப்பட்டன. இந்த மனுக்களில் 244 மனுக்கள் நீதிமன்றம் மற்றும் வேறு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காரணத்தினால் புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பிவைத்து மனுக்கள் மீது விசாரணை முடிக்கப்பட்டது. 

 

மீதமுள்ள 1,350 மனுக்களில், 14/07/2021 வரை 938 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட மனுக்களில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு தொடர்பாக 291 மனுக்களும், சொத்து தகராறு தொடர்பாக 278 மனுக்களும், சட்ட விரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்தக் கோரி 70 மனுக்களும், காவல் நிலைய சேவைகள் வேண்டி 51 மனுக்களும், குடும்பத் தகராறு தொடர்பாக 58 மனுக்களும், இதர காரணங்களுக்காக 190 மனுக்களும் அடங்கும். 

 

நிலுவையில் உள்ள 412 மனுக்கள் மீது விசாரணை நடவடிக்கை விரைவுப்படுத்தப்பட்டு இன்னும் சில நாட்களுக்குள் தீர்வு கண்டு முடித்துவைக்கப்படும்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்