நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
மாணவர் உதித் சூர்யா உட்பட 2 பேர் மீது கண்டமனுர் விலக்கு காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை. இவர்கள் மீது ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலி ஆவணங்களை தயாரித்தல் 419,420,120பி ஆகிய பிரிவுகளில் இருவரின் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும் இருவரையும் கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக ஆண்டிப்பட்டி காவல் ஆய்வாளர் உஷா தலைமையில் ஏழு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இது தொடர்பாக விசாரிக்க 4 பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்தது மருத்துவக் கல்லூரி இயக்ககம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் மாணவர் உதித் சூர்யா மருத்துவ கல்லூரியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே கடிதம் அளித்திருந்தார்.