Published on 07/11/2019 | Edited on 07/11/2019
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை. மேலும் காணொளி காட்சி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்தும், வாக்குச்சாவடி மையங்கள், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளை இறுதி செய்வது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறார். தமிழக உள்ளாட்சி தேர்தல் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.