Skip to main content

தமிழகத்தில் மூத்த மருத்துவர்கள் 10 பேருக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

 


தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மூத்த மருத்துவர்கள் பத்து பேருக்கு, மருத்துவ கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெள்ளிக்கிழமை (ஜூன் 14, 2019) உத்தரவிட்டுள்ளார்.

 

d


அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பேராசிரியர் அந்தஸ்திலான மூத்த மருத்துவர்கள் பத்து பேருக்கு, தமிழக அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இப்பதவி உயர்வுக்கு முன், கண்காணிப்பாளராக பணியாற்ற விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் 20 மூத்த மருத்துவர்கள் கண்காணிப்பாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருந்தனர். அவர்களில் பணிமூப்பு, இன்ன பிற தகுதிகளின் அடிப்படையில் பத்து பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.


அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ராமசுப்ரமணியன், அதே மருத்துவமனையில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சுந்தரவேல், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு உள்ளார்.


வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ராஜவேலு, அதே மருத்துவமனையில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் ஹரிஹரன், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு உள்ளார். சென்னை எம்எம்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை பேராசிரியர் ராஜஸ்ரீ, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை பேராசிரியர் சடகோபன், அதே மருத்துவமனையிலும் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை பேராசிரியர் தனசேகரன், அதே மருத்துவமனைக்கும், கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொது மருத்துவத்துறை பேராசிரியர் ரவிக்குமார் அதே மருத்துவமனைக்கும், சென்னை எம்எம்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவத்துறை பேராசிரியர் மணி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 


திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவத்துறை பேராசிரியர் சிவக்குமார், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்