Skip to main content

பொறியியல் சேர்க்கை -இன்று சிறப்பு பிரிவு கலந்தாய்வு!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

tamilnadu engineering counselling students

 

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (01/10/2020) தொடக்கம்; முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.

 

மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (01/10/2020) முதல் அக்டோபர் 5- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்றைய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 2,410 பேர் பங்கேற்கவுள்ளனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 8- ஆம் தேதி முதல் அக்டோபர் 27- ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 461 பொறியியல் கல்லூரிகளில் 1.63 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

 

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 28- ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்