Published on 25/03/2020 | Edited on 25/03/2020
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
![tamilnadu 1 std and 9 std cm palanisamy](http://image.nakkheeran.in/cdn/farfuture/Jw1amBhtuQ2HBpV4diHrzg5uughLqemRCH7fCpACkrE/1585131188/sites/default/files/inline-images/palanisamy333.jpg)
தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. (24.3.2020) அன்று +2 தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாகத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேநீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, தமிழ்நாடு முழுவதும் இன்று (25.03.2020) மாலை 06.00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை டீக்கடை திறக்க தடை விதிக்கப்படுகிறது". இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.