Published on 14/12/2018 | Edited on 14/12/2018

தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலபாதையை ஆக்கிரமித்து உணவகம்,கடைகள், விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக சிவபாபு என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில், கோவில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீசாரும் அறநிலையத்துறை அதிகாரிகளும் நடடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், திருவண்ணாமலை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அறநிலையத்துறை நீக்கம் வேண்டும் என ஆணையிட்டு கிரிவல பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதது குறித்து திருவண்ணாமலை டிஎஸ்பி நேரில் விளக்கமளிக்க வேண்டும் என கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.