தமிழக சட்டப்பேரவையில் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 234. இதில் பேரவைத் தலைவர் தனபாலை தவிர்த்து அதிமுகவின் பலம் 116. இதில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி ஆகியோரும் அடக்கம்.
கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தின சபாபதி ஆகியோர் டிடிவி தினகரனை ஆதரித்தாலும் பேரவையில் அதிமுக உறுப்பினர்களாகவே இருக்கின்றனர்.
சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் பலம் 89. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த அபுபக்கர் எம்எல்ஏவும் உள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வென்ற தினகரன் சுயேட்சை உறுப்பினராக உள்ளார்.
நியமன உறுப்பினர் நான்சிக்கு பேரவையில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்கும் உரிமை உண்டு. ஆனால் வாக்களிக்கும் உரிமை கிடையாது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்: பழனிப்பன், செந்தில்பாலாஜி, வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், உமாமகேஸ்வரி, ஜெயந்தி பத்மநாபன், சுப்பிரமணியன், சுந்தரராஜ், பார்த்திபன், தங்கதுரை, மாரியப்பன் கென்னடி, ரங்கசாமி, பாலசுப்பிரமணி, ஏழுமலை, முத்தையா, முருகன், கதிர்காமு, கோதண்டபாணி.