தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு பல்வேறு ரவுடிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். அதேபோல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் உட்பட பல்வேறு என்கவுன்டர் சம்பவங்களும் தமிழகத்தில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தமிழகத்தில் நடைபெற்ற என்கவுன்டர்கள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற என்கவுன்டர் குறித்து காவல்துறை அதிகாரிகள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று நேரில் ஆஜராகி உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம், பிரபல ரவுடியான காக்காதோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா, புதுக்கோட்டையில் துரைசாமி என்கிற ரவுடி என நிகழ்த்தப்பட்ட என்கவுன்டர் சம்பவங்களில் என்கவுண்டரில் ஈடுபட்ட நான்கு காவல் ஆய்வாளர்கள், அதில் விசாரணை அதிகாரிகளாக உள்ளவர்கள் என உட்பட என்கவுண்டரில் தொடர்புடையவர்கள் அனைவரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் ஆஜராகி உள்ளனர்.