Skip to main content

சிட்டுக்குருவிகள் வாழ கூடு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே அழிந்து வரும் பறவையினங்களை காக்க ஒவ்வொரு மாணவர்களும் எளிய முறையில் 5 ரூபாய் செலவில் பறவைகளுக்கு கூடு கட்டும் பயிற்சி வரலாறு மீட்புக் குழு சார்பில் வழங்கப்பட்டது.

 

SparrowAwareness Program

 



இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பள்ளி மாணவர்களிடையே வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் பேசினார். அப்போது, "சிட்டுக்குருவிகள் அழிந்தததற்கு மிக முக்கிய காரணம் கம்பு, கேழ்வரகு, மக்கட்டை வெள்ளைச் சோளம், தினை, சாமை, துவரை இவற்றின் உற்பத்திக்காக ஒவ்வொரு கிராமத்திலும் மேட்டு நிலங்கள் எனப்படும் மழையை மட்டுமே நம்பி இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்தனர். ஆனால் இன்றோ மேட்டு நிலங்களும் இல்லை, சிறு தானியங்களும் இல்லை. இதன் விளைவாக சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டன. எனவே நாம் வீடுகளின் முற்றத்தில் மின் விசிறி இல்லாத இடங்களில் சிட்டுக்குருவிகள் வந்து போக கூடு கட்டிட வேண்டும். மேலும் சிறுதானியங்களை உங்க பெற்றோர்களிடம் சொல்லி வாய்ப்புள்ள மேட்டு வயல்களில் பயிரிடச் சொல்லுங்கள்" என்றார்.

பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ரோஜா ரமணி மாணவர்களிடையே பேசுகையில் இன்றைய காலகட்டத்தில் சிறுதானியமும் இல்லை, சிட்டுக்குருவியும் இல்லை நிச்சயம் மீட்கும் நடவடிக்கைகளில் இறங்குவோம் என்றார். மேலும் கூறுகையில் சிட்டுக்குருவியின் எச்சம் வயல்களுக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுகிறது என்பதனையும் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு  பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டார். வித்யாரம்பம் ஆசிரியர் உஷா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.


 

சார்ந்த செய்திகள்