Skip to main content

கலப்பட பால் விற்பனை புகார் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

Sale of adulterated milk?-Tuticorin District Collector personally inspected

 

தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்படப் பால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் பாலின் தரம் குறித்து வட்டாட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

 

தூத்துக்குடி மாநகரப் பகுதிக்கு கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகளவில் அதிகாலையில் பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் பசும்பால் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படிக் கொண்டு வரும் பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலந்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. 

 

புகாரைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் விற்கப்படும் பாலின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இன்று உணவு பாதுகாப்பு துறையினர் விற்பனைக்கு வந்திருந்த பால் கேன்களில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

பாஜகவில் சேர்ந்த தமிழிசை; தேர்தலில் மீண்டும் வாய்ப்பா?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Tamilisai joined BJP; A SEAT again?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.