பெரம்பலூர் டவுன் திருநகரை சேர்ந்தவர் பன்னீர். இவர் மீது கொலை, கட்டப் பஞ்சாயத்து மிரட்டல் என பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் போலீசின் ரவுடி லிஸ்ட்டிலும் உள்ளார். இவர் புதன்கிழமை இரவு ஏழு மணியளவில் பெரம்பலூர் அங்காளம்மன் கோவில் அருகே வரும்போது சில மர்ம நபர்கள் மறைந்திருந்து அறிவாளால் கழுத்தில் சாமாறியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்திற்க்கு உடனே வந்தனர். பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் யார்? முன்விரோதமா? தொழில் போட்டி காரணமா? என்ற கோணத்தில் போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை இரவே அதே ஊரை சேர்ந்த நான்கு பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களிடமும் தீவிர விசாரணையில் உள்ளனர் பெரம்பலூர் போலீசார்.
வளர்ந்து வரும் நகரம் பெரம்பலூர். இங்கே அவ்வப்போது இது போன்ற கொலை சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த நகரம் மீண்டும் ரவுடிகளின் ரத்த வாடை வீச ஆரம்பித்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் தொழில்கள் வளர்ந்துள்ள இந்த ஊரில் பலர் குடியேறி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு அச்சத்தை ஏற்ப்பத்தியுள்ளது இச்சம்பவம். காவல்துறை மீண்டும் ரவுடிகளின் கொலைவெறியை தடுத்து அமைதியான நகரமாக மாற்றுமா? மீண்டும் ரவுடிகள் ராஜ்யமாக மாறுமா? என்கிறார்கள் நகரவாசிகள்.
-எஸ்.பி.சேகர்