Skip to main content

ஆபத்து பயணம்; தவறி விழுந்த சிறுவன்; வைரலாகும் வீடியோ

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
risk travel; The Boy Who Fell; A viral video

மாணவர்களின் ஆபத்தான நடவடிக்கைகளால் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன. தொடர்ந்து பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டு சென்ற பள்ளி மாணவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் செய்திகளும், சிசிடிவி காட்சிகளும் அனுதினம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ராணிப்பேட்டையில் தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்தின் பின்னே உள்ள ஏணியில் தொங்கியபடியும் சில மாணவர்கள் பயணித்து சென்ற நிலையில், ஒரு மாணவர் நிலை தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்