தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டுகள், ஆதாரங்கள்,வேலை செய்யாமல் மக்கள் பணத்தை சம்பளமாக பெற்று வரும் அரசு துறைகள் என அனைத்தையும் அம்பலப்படுத்தி வரும் அறப்போர் இயக்கம் “என்னங்க சார் உங்க சட்டம்” அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கும் நிகழ்ச்சி மயிலப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்றது.
உலகில் உள்ள வளர்ந்து வரும் முக்கிய நாடுகளில் இந்தியா முக்கியம் பெற்று வந்தாலும் நாளுக்கு நாள் ஊழல்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதை தடுக்க நியமிக்கபட்ட அதிகாரிகளும் அதற்கு உடந்தையாக செயல்பட்டு வருகிறார்கள். அதை தடுக்கவும் ஊழல் இல்லாத தேசத்தை அமைக்கவும் பல்வேறு அமைப்புகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள்.அதில் தமிழகத்தில் தீவிரமாக அறப்போர் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் அரசாங்கத்தில் வெளிப்படைதன்மை , ஊழல் தடுப்பு ஒழிப்புதுறையில் சுகந்திரம், ஜனநாயகத்தில் மக்களின் நேரடியாக பங்கேற்பிற்கான அதிகாரம் என்ற முழக்கங்களை வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் “தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு ஆணையங்களின் அதிகாரத்தை வேண்டுமென்றே நீர்த்துபோகும் வேலைகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி டெல்லியிருந்து நடைபெற்று வருகிறது.பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்து இருப்பவர் அந்த பதவிக்கு வருவதற்கு முன்னர் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன் என்றார். ஆனால் இது வரை ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வில்லை. 2007 ஆம் ஆண்டு அப்போதைய அரசு 126 போர் விமானங்களை ஃபிரெஞ்சு அரசாங்கத்தை கேட்டு இருந்தது. 18 விமானங்களை அரசு தருவதாகவும் 108 விமானத்தை இந்தியா பொதுத்துறை நிறுவனம் மூலமாக தயாரிப்பது என 700 கோடிக்கு ஒப்பந்தம் போடபட்டது. 2015 ஆம் ஆண்டு 36 விமானங்களாக குறைத்து இந்திய பொதுத்துறை நிறுவனத்தை விலகி விட்டார்கள். அதன் பின்னர் ரிலையன்ஸ் நிறுவனந்திற்கு கொடுக்கபட்டது. 60,600 கோடி ரூபாய் ஓபந்ததில் 20 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கமிஷனாக தரப்பட முடிவு செய்யபட்டு இருக்கிறது.இதில் ஊழல் மட்டும் நடக்க வில்லை நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து இருக்கிறார்கள். இந்த ஊழலில் நேரடியாக அமைச்சர் ஈடுபட வில்லை பிரதமரே நேரடியாக ஈடுபட்டு இருக்கிறார். இந்த ஊழல் குறித்து கேள்விகள் எழுப்பும் போது பொய்கள் மேல் பொய்களை மத்திய அமைச்சர்கள் சொல்லி வருகிறார்கள். இது பாதுகாப்பு துறை ஊழல் மட்டுமாக பார்க்க முடியாது பாதுகாப்பு துறையின் முதுகில் குத்தப்பட்டதாக தான் பார்க்கமுடிக்கிறது.
ஊழல் இல்லாத நாட்டை படைப்போம் என்று ஆட்சிக்கு வந்த பாஜக இது வரை லோக்பால் கொண்டுவரப்பட வில்லை. ஊழல் ஒழிப்பு சட்டத்தை வலிமை அடைய செய்வதற்கு பதிலாக ஊழல் வளர்ப்பு சட்டமாக மாற்றி ஊழலே நடக்க வில்லை என்று ஆட்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள்” பேசினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தோல்விகள் குறித்து குறிப்பிட்டு பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சமூக செயல்பட்டாளர் அருணா ராய் மற்றும் நிக்கில் டே ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் பெரும் உரிமை குறித்தும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை குறித்தும் பேசினார்கள் “ 1996 ஆம் ஆண்டு பல்வேறு நபர்கள் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் வரைவை அப்போதே சமர்பித்தோம்.நாட்டில் 60 முதல் 80 லட்சம் மக்கள் வரை தகவல் பெரும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். கிராமத்தில் உள்ள மக்கள் அதிகம் தகவல் பெரும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஊழல் ஒரு இனவாதம், அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஜனநாயக விரோதம், பாரபட்சம் என்று பல்வேறு விதத்தில் குறிப்பிட்டார். மக்களிடம் சட்டம் குறித்து புரியவைக்க வேண்டும். அதை புரிய வைத்தால் தான் அது குறித்து பேசி வைக்க முடியும். அப்போது தான் அது குறித்தான போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். தகவல் பெரும் உரிமை சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசபட்டது. சட்டங்கள் அரசியல்வாதிகளால், வழக்கறிஞர்களால் அமைக்க பட்டதாக இருக்க இருக்கூடாது மக்களால் அமைக்கபட்டதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள்” .
ஊழலை தடுக்க ஊழல்வாதிகளை தண்டிக்க சட்டங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த வரைவு அறிக்கை நேற்று அறப்போர் இயக்கம் சார்பாக பிரஷாந்த் பூஷன் மற்றும் அருணா ராய் ஆகியோரால் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.