
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவலோகம் (கன்னியாகுமரி)- 6 செ.மீ., சித்தார் (கன்னியாகுமரி)- 4 செ.மீ., பெருஞ்சாணி (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.