அகில பாரதிய ஆதிவாசி விகாஸ் சங்கம், தமிழ்நாடு பிரிவின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி பழங்குடியின மக்களுக்கான வழக்கறிஞராக, டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ராம் சங்கர் கூறுகையில், “இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் நல்ல நோக்கங்களுக்காகப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகக் கருதப்படும் ஆதிவாசிகளின் நலன்கள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறப் பாடுபட வேண்டும். அதற்குத் துணை நிற்கும் அனைத்து நல உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. ஆதிவாசிகளின் நலன்களையும் அடையாளத்தையும் பாதுகாக்கச் சட்டத்தின் அமலாக்கம் தேவை அதை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து.
நம் நாட்டின் ஜனாதிபதி பழங்குடியினர் எனப் பெருமைப்படும் நாம், நாட்டில் உள்ள அனைத்து பழங்குடியினரின் பொருளாதார நிலை உயர மற்றும் சமூகத்தில் நல்ல நிலையைப் பெற, கல்வி பெற நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.