Published on 06/07/2018 | Edited on 06/07/2018
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் பள்ளிகளுக்கு சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு விநியோகிக்கும் தனியார் நிறுவனமான ’கிறிஸ்டி பிரைடுகிராம் இண்டஸ்ட்ரி’யில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சத்துணவுக்கு முட்டை வழங்கியதில் முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மேல் மில்லின் கேஷியர் கார்த்திகேயன், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தனக்கு மயக்கம் வருவதாக கூறிவிட்டு வெளியே வந்து முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில், முதுகு எலும்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.