Skip to main content

சாக்லேட்டுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்; கடை மீது காரை ஏற்றிய பேராசிரியருக்கு சிறை!

Published on 04/03/2025 | Edited on 04/03/2025

 

Professor jailed for driving car into shop after refusing pay for chocolate

சிதம்பரத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர் வெள்ளிக்கிழமை(1.3.2025) இரவு காசுக்கடை தெருவில் உள்ள வேல்முருகன் என்பவர் மளிகை கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கியுள்ளார். ஆனால், கடைக்காரர் சாக்லேட்டிற்கு பணம் கேட்டபோது ஆத்திரமடைந்த பாலச்சந்தர் கடைக்காரருடன் தகராறு செய்துள்ளார். இதனால் வீட்டுக்குச் சென்ற பாலச்சந்தர் வீட்டில் இருந்த காரை எடுத்து வந்து கடை மீது ஏற்றியுள்ளார்.

அப்போது கடையில் இருந்தவர்கள் கார் கடையின் உள்ளே வருவதைக் கண்டு கூச்சலிட்டு ஓடியதால் அங்கு அசம்பாவிதம் நடைபெறவில்லை.  இந்த சம்பவத்தில் மளிகை கடைக்காரர் பிரபாகரன் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் 9 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  சம்பவத்தில் பாலச்சுந்தருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் பாண்டி மகாத்மா காந்தி மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பாலச்சுந்தரை இன்று(4.3.2025) காவல்துறையினர் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.  சம்பவத்திற்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.  
 

சார்ந்த செய்திகள்