
இராமநாதபுரம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜா இவரது மனைவி சண்முக பிரியா. இவர் இராமநாதபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை சண்முகப்பிரியா வீட்டின் அருகே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
சண்முகப் பிரியா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி களவாடப்படாததோடு அவரது வீட்டின் துணி காயப்போடும் கயிறு கழுத்தில் சுற்றப்பட்டிருந்தது. கொடூரமான முறையில் மனைவி வீட்டின் அருகிலேயே கொலை செய்யப்பட்டும் எந்த சலனமும் இல்லாமல் கணவர் மோகன் ராஜ் (சலூன் கடை நடத்தி வருகிறார்) இருந்ததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், அவர் முன்னுக்கு பின் முரண்பாடாக பேசியதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து பஜார் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். கொலையில் கூலிப்படையினர் சம்மந்தப்பட்டுள்ளனரா? அல்லது நகைக்காக கொலைசெய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இராமநாதபுரத்தில் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.