![private bus driver admk leader incident in dharmapuri distric](http://image.nakkheeran.in/cdn/farfuture/mL3v4qnwTJrQGSJC6sWLLMmdUb_rqXZeNSlDdTU5eDc/1651080937/sites/default/files/inline-images/driver434.jpg)
தனியார் பேருந்து ஓட்டுநரை அ.தி.மு.க. நிர்வாகி தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியச் செயலாளர் சிவபிரகாசம் என்பவரின் கார் ஓட்டுநரும், அ.தி.மு.க.வின் நிர்வாகியுமான ரஞ்சித் குமார் தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்து ரஞ்சித் குமாரின் வாகனத்தை உரசும் படி சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார் பேருந்தை நிறுத்தி உள்ளே சென்று ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கி உள்ளார்.
இது பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவிட்டது. இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதால், அஞ்சிய ரஞ்சித் குமார் ஓட்டுநரிடம் தன்னை மன்னிக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, இருவரும் சமாதானம் அடைந்து சென்றனர்.