Skip to main content

நாடு வளமாக வேண்டும் என்பதே கொள்கை- கமலஹாசன்

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

மக்களுடன் பயணம் என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார் அப்போது பேசுகையில்,


நாடு வளமாக இருக்க வேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாக இருக்கும் ஏற்கனவே பல விஷயங்களை பேசிவருகிறேன் நாம் மறந்துவிட்ட ஒன்றான கிராம சபையின் அவசியம் பற்றி எல்லா கூட்டங்களிலும் சொல்லிவருகிறேன். இப்போதும் நினைவுப்படுத்துகிறேன். தற்பொழுது மக்கள் நீதி மய்யம் படிப்படியான முன்னேற்றத்துடன் நேர்மையான அரசியலை நோக்கி நகரந்து கொண்டிருக்கிறது. 
 

kamal

 

அதே போல இங்குள்ள எவ்வளவு உறுப்பினர்கள் மய்யம் விசில் செயலியை தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துள்ளீர்கள். மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கு கிடைத்த இந்த விசில் செயலி என்பது மக்களின் குறைகளை மக்கள் நீதி மைய்யத்திற்கு எடுத்து சொல்லும் ஒரு சாளரம். 

 

இந்த தைரியம் எப்படி வந்தது, மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து என்ன செய்துகொண்டருக்கிறோம் என்று என் மனதை உறுத்தும்  25 வருட கேள்விக்கு பதிலளிக்கும் படி என் கடமையை செய்ய வந்துள்ளேன்.

 

மக்கள் நீதி மய்யம் சற்றே மாற்றமுள்ள அரசியலை முன்னெடுக்கவில்லை முற்றிலும் மாறுபட்ட அரசியலை துவங்கவிருக்கிறது. அந்த அரசியலின் முன்னோடிகளாக இருக்கப்போவது மக்களாகிய நீங்கள்தான். உறுப்பினர்கள் அனைவரும் அந்த பாதையை அமைக்கும் ஆட்களாக இருக்கப்போகிறீர்கள் கூறினார்.

சார்ந்த செய்திகள்