Skip to main content

அரசுப் பள்ளியா? இல்ல நட்சத்திர ஹோட்டலா? - தலைமையாசிரியரைப் பாராட்டிய முதன்மை கல்வி அலுவலர்

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

Principal Education Officer praised govt school Principal

 

பயிற்சி முகாம் பார்க்கப் போன இடத்தில்  அரசுப் பள்ளியைப் பார்த்து வியந்த அதிகாரி தலைமை ஆசிரியரைத் தேடிச் சென்று பாராட்டினார்.

 

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், நேற்று(28.82022) மாவட்டம் முழுவதும் நடந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்களை பார்வையிடச் சென்றார். அந்தவகையில் அறந்தாங்கி ஒன்றியம் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த குருவளமைய ஆசிரியர் பயிற்சியை பார்வையிடச் சென்ற முதன்மை கல்வி அலுவலர் சில நிமிடங்கள் அப்படியே வியந்து நின்றார். அந்த பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒரு வகுப்பறையில் நடந்தது. அந்த வகுப்பறை நட்சத்திர விடுதி போல இருப்பதைப் பார்த்து தான் வியந்து நின்றார்.

 

Principal Education Officer praised govt school Principal

 

இதனைத் தொடர்ந்து மற்ற வகுப்பறைகளையும் பார்த்த முதன்மைக் கல்வி அலுவலர், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணி எங்கே இருக்கிறார் என கேட்க, அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியரங்கில் இருக்கிறார் என்று கூறியுள்ளனர். இதனை கேட்ட முதன்மை கலவி அலுவலர், உடனே ஜோதிமணியை தேடிச் சென்று அங்கேயே அவருக்கு சால்வை அணிவித்து, அரசுப் பள்ளியை இப்படி எல்லாம் வைத்திருக்க முடியுமா? என்று வியந்து பாராட்டியதுடன் மீண்டும் ஒரு முறை பள்ளிக்கு வருகிறேன் என்று கூறிச் சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.