பருவமழைக் காலம் சாலைகள் தெருவெங்கும் வெள்ளம். சாலைகள் சிதிலமடைந்துள்ளது. சில சாலைகள் பழுது ஏற்பட்டால் அதனை உரிய அதிகாரிகள் தான் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் இன்று வெள்ளம் காரணமாகத் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனையறியாமல் வரும் வாகனங்கள் விபத்தைச் சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டது. அந்த வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து காவலர் ஸ்டாலின். இதனைப் பார்த்தவர் விபத்து நிகழக்கூடும் என்பதால் அதனைத் தவிர்க்கும் வயைில் தானே முன் வந்து அந்தப் பள்ளத்தை மணல் கொண்டு நிரப்பி சீர் செய்திருக்கிறார். அதோடு சாலையைக் கவனிக்கும் பொருட்டு உரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்.
மழைக்காலத்தில் காவலரின் இந்த சமூகப்பணி பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதையறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் காவலர் ஸ்டாலினைப் பாராட்டினார்.