
ஊராட்சி சபைக் கூட்டங்களில் மக்களின் கோரிக்கைகளான திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காட்டு பையூர், வட மலையனூ, வில்லிவலம், டி.கொடியூர் ஆகிய கிராமங்கள் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலை துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் சாலைகளை உடனடியாக மேம்படுத்தி தர வேண்டும். அடுக்கம் முதல் தண்டரை வரையிலான சாலையையும் மேம்படுத்தி தர வேண்டும். திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பேருந்து வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி இயக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க. பொன்முடியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆவிகொளப்பாக்கம் கூட்டுச்சாலையில் பொன்முடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத் துரை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பணிகளையும் துரிதமாக மேற்கொள்கிறோம் என உறுதியளித்தனர்.