Skip to main content

போலீஸ்காரரால் என் குழந்தையின் உயிருக்கு ஆபத்து! நடிகர் தாடி பாலாஜி 

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.   நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.  

 

b

 

இதற்கிடையில் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் ஷோவில் இருவரும் பங்கேற்றனர்.  அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மீண்டும் சேர்ந்த வாழ்வதாக முடிவெடுத்தனர்.  மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்த இவர்களை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் வாழ்த்தினார்.  இந்நிலையில் இன்று நடிகர் தாடி பாலாஜி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அப்போது அவர் நித்யா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

 

b

 

நான் நிதியாவிற்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.  ஜிம் பயிற்சியாளர், போலீஸ்காரர் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நித்யா.  நித்யாவின் இந்த நடவடிக்கையினால் நான் மன உளைச்சலில் இருக்கிறேன்.  குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது.

 

b

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யா நடந்துகொண்டது அனைத்துமே நடிப்பு.   அந்த நிகழ்ச்சியில் வெளியே வந்ததும் நான் அம்மா வீட்டிற்குத்தான் சென்றேன்.   என் குழந்தையை பார்க்க விடவில்லை நித்யா.  என் குழந்தை போஷிகாவுக்கு நித்யாவாலும், போலீஸ்காரராலும் ஆபத்து உள்ளது.   போலீசார் இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை’’ என்று தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

"ஏன் அவுங்க உயிரோட இருக்காங்க" - முதல்வரிடம் கை கூப்பி கோரிக்கை வைத்த தாடி பாலாஜி

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

thadi balaji about thiruthanai issue

 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பறைகளின் இரும்பு கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசியிருந்தனர். மேலும் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியிருந்தனர். இதனை கண்டித்து அங்கிருந்த மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்ப தற்போது நடிகர் தாடி பாலாஜி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த செய்தியை கேட்கும் போது உடம்பே கூசுது. இதுங்க என்ன ஜென்மம். இதுங்க எல்லாம் ஏன் உயிரோட இருக்காங்கனு புரியவில்லை. நீங்க அந்த பள்ளியில் படிச்சிருக்கலாம். அல்லது உங்க குழந்தை அந்த பள்ளியில் படிக்கலாம். 

 

யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இப்படி பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், 6 அறிவு உள்ளவர்களா இல்லை 5 அறிவு உள்ள மிருகமா. இதெல்லாம் எவ்வளவு கேவலமான விஷயம். எவ்ளோ பெரிய தப்பு. குழந்தைகளுடைய படிப்பு கெடுது. இன்றைய சூழலில் அரசு பள்ளிகள் சிறந்த பள்ளி என்று நிறைய இடத்தில நானே பேசியிருக்கிறேன். கண்கூடாக பார்த்திருக்கிறேன். 

 

முதலில் ஒரே ஒரு விஷயம் நினைச்சிக்கங்க. நம்ம முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரு குழந்தை சாதிச்சது என்றால், தான் சாதித்தது போல் அக்குழந்தையை அழைத்து கொண்டு பாராட்ட கூடிய நல்ல மனம் கொண்ட மனிதர் அவர். இந்த சூழலில் இப்படி நீங்கள் பண்ணினால் எவ்ளவு கேவலமா இருக்கு. இது எவ்ளோ பெரிய தவறு. நான் முதல் முறையாக தமிழக முதலமைச்சரை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற குற்றங்கள் நடக்க கூடாது. அதுவும் உங்க ஆட்சியில் நடக்க கூடாது. 

 

அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும், பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், படிக்கும் குழந்தைகளுக்கும் என்னுடைய சப்போர்ட் எப்போதுமே இருக்கும். விரைவில் அந்த பள்ளிக்கு நேரடியாக வந்து பார்க்கிறேன்" என்றார்.