Skip to main content

 'தேர்தல் அறிக்கை' வெளியிட இருக்கும் பாமக

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

pmk to publish 'Election Report'

 

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.

 

சட்டமன்றத் தேர்தலில் 20 வருடங்களுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (05.03.2021) பாமக தேர்தல் அறிக்கை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்