Skip to main content

ஒரே நேரத்தில் அணி வகுத்துச் சென்ற தேஜஸ் விமானங்கள்! (படங்கள்)

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

கோவை மாவட்டம், சூலூரில் உள்ள விமானப் படைத்தளத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 14 தேஜஸ் விமானங்கள் அணி வகுத்துச் சென்றன. 

 

சீனா அவ்வப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதால், இந்தியா போர் விமானங்களைத் தயார் நிலையில் வைக்க பயிற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆயுதம் தாங்கிய விமானங்கள், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட நிலையில், அதன் ஒத்துழைப்பால் இந்த சாகசமும் சாத்தியமாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

75வது குடியரசு தின விழா; மத்திய அரசின் புதிய முன்னெடுப்பு

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

upcoming republic day parade women participate only 

 

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் (ஜனவரி 25) மாலை நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையுடன் குடியரசு தின விழாவானது தொடங்கும். அதனை தொடர்ந்து ஜனவரி 26 ஆம் நாள் காலை குடியரசுத் தலைவர் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார்.

 

இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெறும். இதில் பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.

 

இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்தியாவின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் இந்த குடியரசு தினமானது வைர விழாவாகக் கொண்டாடப்படும் வேளையில் இந்த விழாவில் இடம்பெறும் அணிவகுப்பு முழுவதும் பெண்களைக் கொண்டே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் குடியரசு தின அணிவகுப்பு, ராணுவ இசைக்குழு, அலங்கார ஊர்தி அணிவகுப்பு என அனைத்து நிகழ்வுகளும் பெண் அதிகாரிகள் தலைமையில் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

மேலும், 2024 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பு திட்டமிடல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முப்படைகளுக்கும் பல்வேறு துறை அமைச்சகங்களுக்கும் கடந்த மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில் குடியரசு தின அணிவகுப்பு முழுவதும் பெண்களைக் கொண்டே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

Next Story

தீவிரவாதத் தாக்குதல்; 5 ராணுவ வீரர்கள் பலி

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

jammu and kashmir rajouri district indian five army man incident 

 

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சில தீவிரவாதிகள் கண்டி வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததன் பேரில் ராணுவ வீரர்கள் நேற்று (05.05.2023) தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தீவிரவாதிகள் ஏற்கனவே திட்டமிட்டு மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த வெடிகுண்டு வெடித்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ராணுவ வீரர்களின் உயிரிழப்பு 5 ஆக உயர்ந்துள்ளது.

 

ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து ரஜோரி மாவட்டம் முழுவதும் இணைய சேவையானது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ரஜோரி மாவட்டத்திற்கு நேரில் சென்று ராணுவ வீரர்களை சந்தித்து அங்கு நிலவும் பதற்றமான சூழல் குறித்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளார்.