Skip to main content

புத்தாண்டு பரிசாக பாம்பினை கொடுத்த நபர்; ஊரையே பரபரப்பாக்கி உயிரிழந்த சம்பவம்

Published on 01/01/2023 | Edited on 01/01/2023

 

The person who gave the snake as a New Year gift; The tragedy caused a stir in the town

 

புத்தாண்டு பரிசாக பாம்பினை கொடுத்தவர் அந்த பாம்பால் கடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். நேற்றிரவு அப்பகுதியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மதுபோதையில் கலந்து கொண்டார் மணிகண்டன்.

 

கொண்டாட்டத்தில் இருந்தபோது அப்பகுதியில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பைக் கண்டவர் அதை கையில் எடுத்து விளையாடியுள்ளார். பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதையும் மீறி பாம்பினை கையில் பிடித்து அருகில் இருந்தவர்களிடம் எல்லாம் இது உங்களுக்கு புத்தாண்டு பரிசு என காட்டியுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். 

 

மணிகண்டனுடன் இருந்த கபிலனையும் பாம்பு கடித்தது. தற்போது கபிலன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த பாம்பினை அடித்துக் கொன்றுவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீளப் பாம்பு!  

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
A 7-foot-long snake entered the house in Trichy

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஹாலில் மேசை மீது இருந்த பொருட்கள் திடீரென தவறி விழுந்தன. சப்தம் கேட்டு ஹாலுக்கு வந்து பார்த்தபோது, மேசை மீது சுமார் 7 அடி நீளப் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது. உடனே அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர், கதவை சாத்தினார்.

அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டுக்குள் பாம்பை தேடிய போது எங்கோ பதுங்கிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையிலான வீரர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி வீட்டுக்குள் இருந்த பாம்பை மீட்டனர். பின்னர் பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் இதே போன்றதொரு பாம்பு வனத்துறையால் பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.