கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.
கரூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் என 7472 ஓய்வூதியர்கள் கரூர் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களின் ஓய்வூதிய பலன்கள், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவ செலவினத்தொகை, சிறப்பு சேமநல நிதி, செயற்கை கால் வேண்டிய நிலுவைத் தொகைகள், ஊதிய முரண்பாட்டால் ஏற்பட்ட ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 19 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. வரப்பெற்ற மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
ஓய்வூதியர்களின் மீதும் அவர்களின் கோரிக்கை மனுக்கள் மீதும் கனிவுடன் பரிசீலனை செய்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்களைப் பெற்று துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் கூறினார். இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குநரக துணை இயக்குநர் மதிவாணன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.