Skip to main content

திருச்சி வந்த 4பேருக்கு ஒமிக்ரான்? பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தும் மருத்துவர்கள்

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

Omicron for 4 people who came to Trichy?

 

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது ஒமிக்ரான் திரிபாக உருமாறி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து பல நாடுகளில் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.  வெளிநாடுகளில் இருந்த இந்த ஒமிக்ரான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்திற்குள்ளும் இந்த ஒமிக்ரான் சமூக பரவலாக மாறியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவா்களுக்கு ஆர்டிபிசிஆர் மூலம் கரோனா உறுதி செய்யப்பட்டால் அவா்களுக்கு ஒமிக்ரான் பரிசோதனையும் செய்யப்படுகிறது.

 

கடந்த 1ஆம் தேதி முதல் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளில் அதிகமானவர்கள் நோய் தொற்று உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களாக இருக்கிறார்கள். அதனால் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவா்களுக்கு ஒமிக்ரான் பரிசோதனை கடந்த 3-ஆம் தேதியிலிருந்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் செய்யப்படுகிறது. அதில் நேற்று வரை RTPCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட  15 நபர்களின் மாதிரிகள்  திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி  ஆய்வகத்தில் ஒமிக்ரான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறிகள் (SGen Drop)இருந்ததால் இறுதி முடிவை பெற சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

afaf

 

அதில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பில்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. இதுக்குறித்து அதிகாரிகள் கூறுகையில், “தற்போது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் 10 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள டாக் பார்கெட் என்ற ஒமிக்ரான் கண்டறியும் கருவி கடந்த 3ஆம் தேதி முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு குறைந்தபட்சமாக 5 மணி நேரமும், அதிகபட்சமாக 24 மணிநேரத்தில் முடிவுகள் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மட்டுமே மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக வந்து கொண்டிருக்கிறது.

 

அதில் ஒமிக்ரான் சோதனைக்கு என்று கொடுக்கப்பட்ட இந்த டாக் பார்கெட் என்ற கருவியின் மூலம் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் இறுதி முடிவிற்காக சென்னை அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு வந்தவா்களில் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறிகள் இருந்ததால் இறுதி பரிசோதனை முடிவுகளைப் பெறுவதற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பொதுவாகவே அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் இறுதி சோதனைக்கு அனுப்பப்பட்டால் சோதனை முடிவுகளைப் பெற 6 நாட்கள் ஆகும் என்று கூறுகின்றனா். எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், முககவசம், தனிநபா் இடைவெளி, கைகளை கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

மேலும், "ஒமிக்ரானைப் பார்த்து பயப்பட வேண்டாம். உயிருக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்திவிடாது, அதற்கு அறிகுறிகள் கிடையாது. சாதாரண சளி, காய்ச்சல் போன்றவை இருக்கும். தற்போது 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தபட்டுவரும் நிலையில், அது அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு ஏற்படுத்தி ஒமிக்ரானைத் தடுக்கும்” என்று மருத்துவா்கள் கூறுகின்றனா்.

 

 

சார்ந்த செய்திகள்