Published on 07/10/2022 | Edited on 07/10/2022
அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு 2022-ல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் விழா மேடையில் பேசிய ஆளுநர், ''திருக்குறள் வாழ்க்கை நெறிமுறையை கற்பிப்பதை மட்டுமே கூறுகிறார்கள். ஆனால் திருக்குறள் கற்பிக்கும் ஆன்மீகம் பற்றி யாருமே கூறுவதில்லை. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை ஜி.யு.போப் தவறாக மாற்றி எழுதியுள்ளார். திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்'' என பேசியுள்ளார்.